இன்று ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விபரம்
ஜனாதிபதியால் இன்றைய தினம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் 16 பேர் உள்ளிட்ட, 93 கைதிகள், பொசன் பெளர்ணமி தினத்தையொட்டி, விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ள 16 தமிழ் அரசியல் கைதிகளின் விபரம் இதோ :
யாழ்ப்பாண மாவட்டம் : நடராஜா சரவணபவன், புருஷோத்தமன் அரவிந்தன், இராசபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், நளன் சிவலிங்கம், சூரியமூர்த்தி ஜீவோகன், சிவப்பிரகாசன் சிவசீலன், மயில்வாகனம் மாடன், சூர்யகுமார் ஜெயச்சந்திரன்
மன்னார் மாவட்டம்: சைமன் சந்தியாகு, ராகவன் சுரேஸ், சிறில் இராசமணி,எம்.எம். அப்துல் சலீம், சந்தன் ஸ்ராலின் ரமேஸ்,கபிரியேல் எட்வேட் யூலியன்
மாத்தளை மாவட்டம் : விஸ்வநாதன் ரமேஸ் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.