கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுக்கு சினோஃபோம் தடுப்பூசி ஏற்றல்.
கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சினோஃபோம் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிராந்திய சுகாதார சேவைகள் மாவட்ட பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் தகவல் வெளியிட்டுள்ளார்.
கிளிநொச்சி – அறிவியல் நகரில் இயங்கி வரும் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பூசி ஏற்றுப் பணி (24.06.2021) முன்னெடுக்கப்பட்டது.
ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 2100 சினோஃபோம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கரேந்திர ரணசிங்க அவர்கள் மற்றும் கிளிநொச்சி 57வது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜெயவர்த்தன அவர்களின் ஒழுங்குப்படுத்தலுக்கு அமைவாக, தடுப்பூசி வழங்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.