ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்காதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!
ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கு ஜூன் 30ம் தேதி கடைசி நாள் என கூறப்பட்ட நிலையில் இதனை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
2018ம் ஆண்டில் ஆதார் அட்டை குறித்து உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்த பின்னர், வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கும், நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டையைப் பெறுவதற்கும் 12 இலக்க ஆதார் அடையாள எண் கட்டாயமாகிவிட்டது. இந்த நிலையில் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கான கடைசி தேதியாக மார்ச் 31 அறிவிக்கப்பட்டிருந்தது.பின்னர் கொரோனா 2வது அலை காரணமாக ஜூன் 31 வரை இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
ஆதார்-பான் இணைக்கவில்லை என்றால் பான்கார்டு செயலிழந்துவிடும் என்றும் எச்சரிக்கப்பட்டது. 1 8வகையான நிதி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு அவசியம் என மத்திய அரசு வகைப்படுத்தியுள்ளது. எனவே, ஆதார்- பான் இணைக்கவில்லை என்றால் இந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆதார்-பான் கார்டுகளை இணைப்பதற்கு 5 நாட்கள் மட்டுமே அவகாசம் இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக கால அவகாசத்தை மேலும் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் ஆதார் – பான் கார்டுகளை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாத அவகாசத்திற்குள் ஆதார்- பான் கார்டுகளை இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செயலிழந்து விடும் என்பது கவனத்தில்கொள்ள வேண்டியதாகும்.