மாநிலங்களின் கையிருப்பில் 1.45 கோடி தடுப்பூசிகள்: மத்திய அரசு
மாநிலங்களின் கையிருப்பில் 1.45 கோடி கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தியில்,
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை 31,17,01,800 கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், 29,71,80,733 கொரோனா தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டுள்ளது. கையிருப்பில் 1,45,21,067 தடுப்பூசிகள் உள்ளன. மேலும், மாநிலங்களுக்கு 19,10,650 தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கைய மத்திய அரசு அமல்படுத்தியுள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 61.19 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.