விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ பொத்துவில் பிரதேசத்திற்கு விஜயம் !
விளையாட்டுத்துறை, டிஜிட்டல் தொழில்நுட்ப அபிவிருத்தி அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இன்று 2021.06.26 காலை பொத்துவில் பிரதேசத்திற்கு விஜயம் செய்து பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது பொத்துவில் ஜலால்தீன் சதுக்க பொது மைதானத்தி்ல் நடைபெற்ற “Tennis-Court” க்கான அடிக்கல் நடும் நிகழ்விலும் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ கலந்து கொண்டார்
இந்த நிகழ்வில் இளைஞர் விவகார விளையாட்டு துறை இராஜாங்க அமைச்சர் தெனுக விதானகே, அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி.வீரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.திலக் ராஜபக்ஷ, கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினர் றிஸ்லி முஸ்தபா, அமைச்சரின் இணைப்பாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் இணைப்பாளர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.