கோவிந்தா.. செல்லாத நோட்டு போட்டாங்க கோவிந்தா!
திருப்பதி: திருப்பதி கோவில் நிர்வாகம் தன் வசம் உள்ள ரூ.50 கோடி மதிப்புள்ள பழைய நோட்டுக்களை மாற்ற நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ம் தேதி மத்திய அரசு பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கியது. இதனையடுத்து ரிசர்வ் வங்கி மற்றும் பல்வேறு வங்கிகள் பழைய நோட்டுக்களை மாற்றுவதற்கு கால அவகாசம்அளித்திருந்தன. தொடர்ந்து பழைய நோட்டுகளை மாற்றுவது முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது.
இந்நிலையில் திருமலை திருப்பதி கோவில் உண்டியலில் பக்தர்கள் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை செலுத்தி உள்ளனர். இதன்மதிப்பு ரூ. 50 கோடி அளவிற்கு உள்ளது. கடந்த 4 ஆண்டுகாலமாக வங்கியில் பரிமாற்ற முடியாமல் இருந்து வந்தாக கூறப்படுகிறது
இதனிடையேதிருமலை திருப்பதி கோவில் அறக்கட்டளை தலைவர் ஓய்.வி.,சுப்பாரெட்டி, பக்தர்கள் காணிக்கையாக வழங்குவதை நிராகரிக்க முடியாது என கூறினார்.மேலும்
புதுடில்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர் சந்தித்தார். அப்போது கோவில் வசம் ரூ.50 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுக்கள் இருப்பதை கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் அதனை மாற்றித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து ஆராய்வதாகவும் வங்கி அதிகாரிகளுடன் பேசுவதாகவும் அமைச்சர் தெரிவித்ததாக சுப்பா ரெட்டி கூறினார்
Comments are closed.