கொலை முயற்சி வழக்கிலிருந்து விடுதலை பெற்றவர் திடீர் மரணம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின்
கொழும்பு – கொள்ளுப்பிட்டி, பித்தலை சந்தியில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, பாதுகாப்பு செயலராக இருந்த போது அவரைக் கொலை செய்ய முயன்றதாக கூறி கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், குற்றமற்றவர் என கடந்த 2019 டிசம்பர் மாதம் விடுவிக்கப்பட்ட நபர் திடீரென உயிரிழந்துள்ளார்.யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த சந்ரபோஸ் செல்வச் சந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இதன்படி,கடந்த 2006 டிசம்பர் மாதம் முதலாம் திகதி கொள்ளுப்பிட்டி- பித்தலை சந்தியின் கோட்டாபய ராஜபக்க்ஷவை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். கோட்டாபய ராஜபக்க்ஷ உள்ளிட்டவர்களை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சுமத்தி, சந்ரபோஸ் செல்வச் சந்திரன் கைது செய்யப்பட்டிருந்தார்.25 வயதில் கைது செய்யப்பட்ட அவர், அரசியல் கைதியாக 15 வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

மேலும் ,இந்நிலையில், அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகி, குறித்த அரசியல் கைதி சித்திரவதை செய்யப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டதக உறுதி செய்து, வழக்கிலிருந்து விடுதலை பெற்றுக் கொடுத்திருந்தார்.

இந்நிலையிலேயே 40 ஆவது வயதில் விடுதலை பெற்ற குறித்த அரசியல் கைது 41 ஆவது வயதில் திடீரென உயிரிழந்துள்ளார். மரணத்துக்கான காரணம் உடனடியாக தெரியவராத போதும், பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.