இறந்ததாக எண்ணிய நபர் மீண்டும் வந்த அதிசயம்- கொண்டாடி மகிழ்ந்த ஊர் மக்கள்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்தவர் சின்னகன்னு( 46) இவர், மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
கடந்த 10 மாதத்திற்கு முன்பு கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் பிழைப்பு தேடி உறவினர்களிடமும் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டார்.
இதனால், இவரைப்பற்றி தொடர்பு எதுவும் இல்லாததால் உறவினர்கள் சின்னகன்னுவை காணவில்லை என பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், புலிகுத்தி கிராமம் அருகே விவசாய கல்லூரி தோப்பிற்குள் ஒருவர் இறந்து கிடப்பதாக கல்லல் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற கல்லல் காவல்துறையினர் அருகில் இருப்பவர்களிடம் விசாரனை செய்ததில், இறந்து கிடப்பது கல்லுப்பட்டி மாதா கோவில் அருகே வசிக்கும் காணாமல் போன சின்னகன்னு என கூற, உறவினர்களை அழைத்துவந்த காவல்துறை இறந்து கிடந்தவரை காண்பித்து இவர் சின்னகன்னு தானே என கேட்டனர்.
ஆனால் அவர் சின்னக்கன்னு இல்லை என உறவினர்கள் மறுத்துள்ளனர். இதன்பின்னர், காலை சின்னகன்னு உடலை வாங்க சிவகங்கை செல்ல இருந்த நிலையில் இறந்ததாக கூறப்பட்ட சின்னகன்னு தேவகோட்டையில் உயிரோடு இருப்பதாக உறவினர் ஒருவர் கூறினார்.
மேலும், தேவகோட்டை சென்று சின்னகன்னுவை அழைத்து வந்தனர். கிரமாமே சின்னகன்னு இறந்து விட்டதாக கூறியதால் சின்னகன்னு உயிரோடுதான் உள்ளார் என தெரிவிக்க வண்டியில் ஏற்றி கிராம வீதிகளில் மக்களிடம் சின்னகன்னு உயிரோடு தான் இருக்கிறார் என காண்பித்தனர்.
அடையாளம் தெரியாத இறந்தவர் வழக்கை முடிப்பதற்காக உரிய விசாரணை மேற்கொள்ளாமால் பழங்குடி மக்களை போலீசார் மிரட்டி சம்மதிக்க வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இருந்தாலும், கிராமத்தினர் சிலரும், காவல்துறையினரும் உறவினர்களை மிரட்டி இறந்து கிடப்பது சின்னகன்னுதான் என எழுதிவாங்கி உடலை பிரேத பரிசோதனைக்கு சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.