யாழில் இரு நகைக் கடைகள் தனிமைப்படுத்தல்!

யாழ்ப்பாணம் மாநகரில் இரண்டு நகைக் கடைகள் சுகாதாரத்துறையினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில் உள்ள இரண்டு நகைக் கடைகளே மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டு நகைக் கடைகளிலும் பணியாற்றுபவர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.