ராஜபக்ச அரசின் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் முறைப்பாட்டைப் பதிவுசெய்ய குழு! -நியமித்தது சஜித் அணி.
ராஜபக்ச அரசின் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவும், முறைப்பாடுகளைப் பதிவுசெய்வதற்காகவும் விசேட குழுவொன்ற பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கியுள்ளது.
அக்குழுவின் தலைவராக மாத்தளை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகார நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனம் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஆட்சியின் கீழ் பழிவாங்கல் படலம் தொடர்கின்றது எனவும், நேர்மையாகச் செயற்படும் அரச ஊழியர்கள்கூட ஒடுக்கப்படுகின்றனர் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.