செப்டெம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாக திறக்கும் சாத்தியம்.
ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு –
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆகும் போது நாட்டை முழுமையாக திறக்கக்கூடியதாக இருக்கும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்படி ஜனாதிபதி செயலகத்தின் இன்று இடம்பெற்ற 99 ஆவது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
உலகளவில் பரவியுள்ள கொவிட் நோயைத் தடுப்பதற்கு தடுப்பூசிகளே தீர்வாக உள்ளன. மகிழ்ச்சியடையும் வகையில் இலங்கைக்கு இந்த மாதத்தில் 9 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன.
மேலும், மக்களுக்கு செலுத்துவதன் மூலம் நாட்டை செப்டம்பர் மாதம் முழுமையாக திறக்க முடியும். நாட்டைத் திறக்காவிட்டால் பொருளாதாரத்தை நடத்திச் செல்ல முடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.