முல்லைத்தீவில் 60அகவைக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை.
அரசாங்கம் நாட்டு மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினரின் ஏற்பாட்டில் 60 அகவைக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை திங்கட்கிழமை மாலை 2.30 மணிக்கு புதுக்குடியிருப்பு சிறீசுப்பிரமணிய வித்தயசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் உள்ள 60 அகவைக்கு மேற்பட்டவர்கள் இது தொடர்பில் கிராம அபிவிருத்தி சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இது தொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 அகவைக்கு மேற்பட்டவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கான அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக புதுக்குடியிருப்பு, வெலிஓயா பகுதிகளில் அமையப்பெற்ற ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு ஏற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து மாவட்டத்தில் 60 அகவைக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள.
இன்று முதற்கட்ட சைனோபாம் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு எதிர்வரும் ஆவணி மாதம் 2ஆம் திகதி இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றப்படும் என மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.