சுத்திகரிக்கப்பட்ட ஒரு தொகுதி குடி நீர் போத்தல்கள் வழங்கி வைப்பு.
மன்னார் மாவட்டத்தில் தற்போது 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அவர்களுக்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட ஒரு தொகுதி குடி நீர் போத்தல்களை மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனம் (மெசிடோ) செவ்வாய்க்கிழமை வழங்கி வைத்துள்ளனர்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்திடம் (மெசிடோ) முன் வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக குறித்த நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ துரித நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதற்கு அமைவாக குறித்த நிறுவனத்தின் பிரதி நிதிகள் ஒரு தொகுதி சுத்திகரிக்கப்பட்ட போத்தலில் அடைக்கப்பட்ட டி நீர் போத்தல்களை மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகளிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.