கண்பார்வை இல்லாமல் தவித்த மூதாட்டி: கொரோனா தடுப்பூசி செய்த அற்புதம்
மும்பையில் கண் பார்வையை இழந்த மூதாட்டிக்கு கொரனோ தடுப்பூசி போட்ட பிறகு பார்வை வந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மக்களை வாட்டி வதைக்கும் கொரோனா நோயிலிருந்து பாதுகாப்பதற்கு ஒரே ஒரு வழி தடுப்பூசி மட்டுமே.
ஆரம்பக் கட்டத்தில் தடுப்பூசி என்றாலே தெறித்து ஓடிய மக்கள், தற்போது தடுப்பூசியின் அத்தியாவசியத்தை உணர்ந்து வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொள்கிறார்கள்.
பொதுவாக தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பக்க விளைவுகள் வருவது வழக்கம்.
அப்படி பொதுவான பக்க விளைவுகளையே தடுப்பூசி ஏற்படுகிறதே தவிர வேறு எந்த பாதிப்பும் தடுப்பூசியால் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த நிலையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 70 வயதான மூதாட்டிக்கு தடுப்பூசி போட்ட பிறகு கண் பார்வை வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மூதாட்டிக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கண்புரை ஏற்பட்டதால், இரு கண்பார்வையும் இழந்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அப்பகுதி சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியதால் இந்த மூதாட்டி தயங்காமல் சென்று கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
இரு கண்ணிலும் முற்றிலுமாக பார்வையை இழந்திருந்த மூதாட்டிக்கு தடுப்பூசி போட்டவுடன் கண்பார்வை ஓரளவு மீண்டும் கிடைத்துள்ளது.