நாடு முழுவதும் 1,500 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்.. விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு…
கொரோனா இரண்டாவது அலை பரவிய போது, மருத்துவ ஆக்ஸிஜனுக்கான தேவை பல மடங்கு அதிகரித்தது. இந்தநிலையில் இந்தியாவில் ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிப்பது தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் 1500 ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்த 1500 மையங்களில் தயாரிக்கப்படும் ஆக்ஸிஜனை வைத்து 4 லட்சம் படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் வசதி செய்து கொடுக்க முடியும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை கூடிய விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், இதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றுமாறும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
இந்தநிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்களுடன், 13ம் தேதி மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடவுள்ளார்.