தமிழகத்தின் அடுத்த ஆளுநர் இவர் தான்! வெளியானது தகவல்..!
தமிழகத்தின் புதிய ஆளுநராக, பா.ஜ.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்
ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தலைநகர் டெல்லிக்கு சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார். மத்திய அரசிடமிருந்து வந்த அழைப்பின்படியே ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லிக்கு சென்றுள்ளார்.
இதற்கிடையே, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக, தமிழகத்தின் புதிய ஆளுநராக, பா.ஜ.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்காகவே, ஆளுநர் பன்வாரிலால் புராேகித் அவசர அவசரமாக டெல்லிக்கு வரும்படி அழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, மூத்த மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜாவடேகர், ஹர்ஷ் வர்தன் உள்ளிட்டோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இவர்களை, மாநில ஆளுநர்களாக நியமிக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர ்பிரசாத் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.