21 நாள் அடைத்து வைக்கப்பட்ட இளம்பெண்: நாள்தோறும் அரங்கேறிய வன்கொடுமை! காதல் ஏற்படுத்திய விபரீதம்
இந்தியாவில் காதலனை நம்பி வீட்டைவிட்டு வெளியேறிய இளம்பெண் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் 13 வயதான பெண்ணொருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார்.
அவர் அதே பகுதியில் வசிக்கும் ரகீம் என்ற பீடி விற்பனை செய்பவரை காதலித்து வந்துள்ளார். பின்பு ரகீம் குறித்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறியதால், காதலனின் வார்த்தையை நம்பி கடந்த 14ம் தேதி திருமணம் செய்து கொள்ளும் ஆசையில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பின்பு ரகீம் அந்த பெண்ணை சலார்பூரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதோடு, அங்கு ஒரு அறையில் வைத்து பூட்டி, தினமும் அவரை வன்கொடுமை செய்துள்ளார்.
பின்பு அப்பெண்ணை வேறொரு நபருக்கு விற்பதற்கு ஏற்பாடு செய்த நிலையில், இதனை தெரிந்து கொண்ட இளம்பெண் கடந்த வாரம் 3ம் தேதி தான் இருக்கும் இடத்தினை பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
குடும்பத்தினர் பொலிசாரிடம் புகார் அளித்து, வழக்கு பதிவான நிலையில் ரகீம் இருக்கும் இடத்தினை கண்டுபிடித்த பொலிசார் அப்பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்ததோடு, ரகீமையும் கைது செய்துள்ளனர்.