பாற்பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு விழா.
வவுனியா மாவட்ட மரக்காரம்பளைப் பிரதேசத்தில் மீள ஆரம்பிக்கப்பட்ட பாற் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தொழிற்சாலையை திறந்து வைத்த வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவுடன் தொழிற்சாலையை மீள ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்ததுடன் இதன் மூலம் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் விவசாயிகளுக்கான சந்தை வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுகின்றது என்பதனையும் சுட்டிக் காட்டினர். மேலும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் வடமாகாணத்திற்கான மேய்ச்சல் தரை நிலங்களைப் பெற்றுக் கொள்வதற்காக இணைந்த அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துடன் இலங்கையில் முதற்தடவையாக அமைச்சரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது எனவும் தெரிவித்தார்.
இதன் மூலம் வட மாகாணத்தில் கால்நடை வளர்ப்பினை மேலும் வளர்ச்சி அடைய செய்ய முடியும் என்பதனையும் சுட்டிக்காட்டினார். குறித்த நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்,வன்னி மாவட்ட பொலிஸ் அத்தியட்சர், வவுனியா பிரதேச சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகளும்கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிட்டத்தக்கது.