எனது மகள் தற்கொலை செய்யவில்லை ; சாகடித்துள்ளார்கள் – செய்தியாளர்களிடம் பதியுதீனின் வீட்டில் இறந்த சிறுமியின் பெற்றோர் (வீடியோ)
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் இடம்பெற்ற அசம்பாவிதத்தால் தீயில் கருகி இறந்த ஒரு சிறுமியின் பெற்றோர், தங்கள் மகள் ஒருபோதும் தீ வைத்துக் கொண்டிருக்க மாட்டார், யாரோ மகளை கொன்றுள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.
தங்களது கடனை திருப்பிச் செலுத்த முடியாததால், தனது மகள் கடனை சம்பாதிக்க முன்னாள் அமைச்சரின் வீட்டில் ஒரு வேலை செய்ய விருப்பத்துடன் சென்றதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
வீட்டில் வேலை செய்யும் போது தனது மகள் தாக்கப்பட்டதாகவும், அதைப் பற்றி தனது மகள் தொலைபேசியில் தெரிவித்ததாகவும் தாயார் மேலும் தெரிவித்தார்.
தீ என்றாலே பயப்படும் என் மகள் தீ வைத்துக் கொள்ள மாட்டார் என அச் சிறுமியின் தந்தை தெரிவித்தார்.
அங்கு வேலை செய்ய முடியாது என்று தனது மகள் சொன்னதாகவும் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர்கள் தெரிவித்தார்கள்.
Video: