அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.
புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன் என்று முன்னாள் முஸ்லிம் சமய கலாச்சார தபால் துறை அமைச்சர் ஏ.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் முஸ்லிம் சமய கலாச்சார தபால் துறை அமைச்சர் ஏ.எச். ஏ.ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இஸ்லாத்தின் பிரதான கடமைகளுள் ஹஜ் கடமையும் ஒன்றாகும். இந்த ஹஜ் கடமையினை நிறைவேற்ற சந்தர்ப்பம் கிடைக்கா விடடாலும் உலக முஸ்லிம்களுடைக்கிடையே ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி நிற்கிறது ஹஜ் கடமை. இத்திருநாளில் அதன்படிப்பினைகளை மகத்துவத்தையும் உணர்ந்து முஸ்லிம்களாகிய நாங்கள் நடத்தல் வேண்டும்.
அதேவேளை கொரோனா தொற்றுக் காலத்தில் சுகாதார சட்ட திட்டங்களைப் பேணி நாட்டு மக்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு முன்னுரிமையளித்து கொரோனா பாதுகாப்புடன் நடந்து கொள்வது மிக அவசியமாகும்.
எனவே இந்த இனிய பெருநாளை மனமகிச்சியுடன் கொண்டாடும் இலங்கை வாழ் அனைவருக்கும் எனது உள்ளம் நிறைந்த பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
(இக்பால் அலி)