திருமண கோவிட் விதிமுறைகளை மீறினால் சட்ட நடவடிக்கை :உபுல் ரோகண
அனைத்து திருமண நிகழ்வுகளும் நாளை முதல் பொதுச் சுகாதார பரிசோதகரினால் பரிசோதிக்கப்படும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்டால், திருமணத்தின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் மண்டப நிர்வாகம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண தெரிவித்தார்.