நாட்டு மக்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள அவசர கோரிக்கை.
கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை விரைவில் நிறைவு செய்ய வேண்டியுள்ளமையினால், அருகாமையிலுள்ள கொவிட் தடுப்பூசி செலுத்தும் நிலையங்களுக்கு சென்று தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
இதன்படி ,கொழும்பு மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
கொரோனா பரவலை தடுப்பதற்கு காணப்படும் ஒரே வழிமுறை தடுப்பூசி பெற்றுக்கொள்வது எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை , ஏனைய மாவட்டங்களிலுள்ள மக்களுக்கும் கொவிட் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
மேலும் ,சில பகுதிகளில் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என தெரிவித்த அவர், புத்தளம் மாவட்டம் அதில் முன்னிலையிலுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.