உயிருக்கு போராடும் கணவரின் உயிரணுவை கேட்டு நீதிமன்றத்திற்கு சென்ற மனைவி! தீர்ப்பு வழங்கிய நீதிபதி: நெகிழ்ச்சி சம்பவம்

இந்தியாவில் கொரோனாவால் உயிருக்கு போராடி வரும் கணவனின் உயிரணுக்களை சேமித்து வைக்க மனைவி கோரிய வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

குஜராத் மாநிலம் வதோதராவில், கொரோனா காரணமாக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு கணவர் ஒருவர் உயிருக்கு போராடி வருகிறார், இதனால் அவரின் மனைவி, IVF/ART முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பப்பட்டுள்ளார். I

VF/ART என்றால், கணவனோ அல்லது ஒரு கணவரிடமோ இருந்து விந்தணுவை பெற்று, அதில் ஒரு விந்தணுவை பெண்ணின் முட்டைக்குள் செலுத்தி கர்ப்பம் தரிக்கும் முறை ஆகும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவர் உயிர் பிழைப்பது குறைவு என்பதால், அவரின் மனைவி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். அதாவது, அவரின் உயிரணுவை சேமித்து அதன்மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பப்பட்டுள்ளார்.

ஆனால் அந்த நபரின் விந்தணுவை எடுக்க அவர் அனுமதி அளிக்க வேண்டும். உயிருக்கு போராடும் நபர், அனுமதி கொடுக்கும் நிலையில் இல்லை. இதனால் நீதிமன்றம் மூலமாக மட்டுமே அனுமதி பெற்று, அந்த நபரின் உயிரணுக்களை மருத்துவர்கள் சேமிக்க முடியும்.

இதன் காரணமாக, அப்பெண் உடனடியாக அவசர வழக்காக, அங்கிருக்கும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அஸ்தோஷ் ஜெ சாஸ்திரி உடனே உயிரணுவை சேமிக்கும்படி அனுமதி வழங்கினார்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவிட கிடைத்தவுடன் உடனடியாக அந்த நபரின் உயிரணுவை பாதுகாப்பான மருத்துவ முறை மூலம் வெளியே எடுக்கப்பட்டு, முறையாக சேமிக்கப்பட்டது.

அந்த நபர் இறக்கும்பட்சத்தில் அல்லது பாலியல் உறவில் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள வசதியாக அவரின் உயிரணு சேமிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்கு என்பதால், மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதால் இப்படி தீர்ப்பு வழங்கியதாக நீதிபதி குறிப்பிட்டு இருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.