மலையகத்திலிருந்து அழைத்து வரப்பட்ட 11 இளம் பெண்கள் கடுமையாக துஷ்பிரயோகம் : விசாரணைகளில் அதிரும் தகவல்கள்
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் அடிமைகளாக வேலை செய்ய முன்னர் மலையகப் பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட 11 இளம் பெண்கள் கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸ் தரப்பு செய்திகளை மேற்கோள்காட்டி சிங்கள பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் ,
முன்னாள் அமைச்சரின் வீட்டிற்கு வேலைக்காக அழைத்து வரப்பட்ட ஒரு இளம் பெண், முன்னர் பம்பலப்பிட்டி பகுதியில் வைத்து ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், ரிஷாத் பதியுதீன் முந்தைய அரசாங்கத்தின் அமைச்சராக இருந்தபோது அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் மற்றோர் இளம் பெண் தனக்கு நடந்த பாலியல் பலாத்காரம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
அவ் இளம் பெண் ரிஷாத் பதியுதீனின் மைத்துனரால் (மனைவியின் சகோதரர்) பாலியல் பலாத்காரம் செய்ததாக கொடுத்த தகவலின் அடிப்படையில் பொலிசார் விசாரணையைத் தொடங்கினர்.
பொலிஸ் வட்டார தகவல்களின்படி, ரிஷாத் பதியுதீனின் மைத்துனரால் பாதிக்கப்பட்ட அவ் இளம் பெண், அவரை பாலியல் பலாத்காரம் செய்த இடமான உத்தியோகபூர்வ இல்லத்தையும் , அறையையும் போலீசாருக்குக் அடையாளம் காட்டியுள்ளார்.
ரிஷாத் பதியுதீனின் மனைவி, மைத்துனர் , மாமனார் மற்றும் சிறுமியை அழைத்து வந்த தரகர் ஆகியோர், வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மர்மமான மரணம் தொடர்பாக நேற்று (23)அதிகாலை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஒரு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக நேற்று காலை கைது செய்யப்பட்ட ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் (மனைவியின் சகோதரர்) மீது மற்றுமோர் விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
இதற்கிடையில், ரிஷாத் பதியுதீனின் வீட்டு வேலைக்கென கொண்டு வரப்பட்ட இளம் பெண்கள் மற்றும் சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் செய்ததாக தெரியவரும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மேற்கு மாகாணத்தின் மூத்த டி.ஐ.ஜி. தேஷபந்து தென்னகோன் தலைமையில் பெண் ஆய்வாளர் வருணி போகஹவத்தையை நியமித்துள்ளார்.
அதற்கமைய, ரிஷார்ட் பதியுதீனின் வீட்டில் முன்னர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமிகளை விசாரிக்க திருமதி வருணி போகஹவத்தை தலைமையிலான சிறப்பு குழு மலையக பகுதிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.
தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள தரகர் சங்கர் எனப்படும் பொன்னையாதான் , ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலை செய்ய அனைத்து சிறுமிகளையும் மலையக பகுதிகளில் இருந்து அழைத்து வந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படி இளம் சிறுமிகளை அழைத்து வந்தபோது, தரகருக்கு லட்சக் கணக்கில் பணம் அமைச்சரால் கொடுக்கப்பட்டு வந்தமையும் தெரிய வந்துள்ளது.
சிறு வயது ஹிசாலினி எனும் சிறுமி தற்கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட ரிஷார்ட் பதியுடீனின் மனைவி உட்பட நான்கு சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
தன்னை தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சிறுமியும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சிறுமியை 8 மாதங்களாக வீட்டிற்கு செல்ல அனுமதிக்கவில்லை என்றும், ஒரு மாதத்திற்கும் மேலாக தனது பெற்றோருக்கு தொலைபேசி அழைப்பு கூட செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சிறுமி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டின் பின்னால் இருக்கும் ஒரு தனி சிறிய அறையில் தங்க வைக்கப்பட்டிருந்துள்ளார் எனவும், அந்த அறையில் மின்சார விளக்கொன்று கூட இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இரவு 10.30 மணியளவில் சிறுமியை அறையில் வைத்து கதவு மூடப்பட்டு, மறுநாள் காலை 5.30 மணிக்கு அறை திறக்கப்பட்டும் விதத்தில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு, கழிப்பறை செல்லக் கூட அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த தரகர் பொன்னையாவை போலீசார் விசாரித்ததில் பல முக்கியமான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
மேற்கு மாகாணத்தின் பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி. தேசபந்து தென்னக்கோன் மேற்பார்வையில் ஐந்து சிறப்பு போலீஸ் குழுக்கள் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
– மூலம் : திவயின