மருந்தை வீசிய ரிஷாட் மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு …..
ரிஷாட் பதியூதீனின் வீட்டில் சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவத்தின் பின்னர் திடீர் சுகயீனமுற்ற பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ரிஷாட் பதியூதீனின் பயன்பாட்டிற்காக, வைத்தியசாலையில் பிரத்தியேக மலசலகூடமொன்று வழங்கப்பட்டிருந்ததாக தெரிய வருகின்றது.
ரிஷாட் பதியூதீன், மலசலகூடம் செல்லும் சந்தர்ப்பங்களில், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், மிகுந்த அவதானத்துடன் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ரிஷாட் பதியூதீன் மலசலகூடத்திற்கு இன்று செல்லும் சந்தர்ப்பத்தில், தனது கைகளில் இரகசியமான முறையில் கடதாசியொன்றை எடுத்து சென்றமையை குற்றப் புலனாய்வு பிரிவினர் அவதானித்துள்ளனர்.
இவ்வாறு தனது கைகளில் கொண்டு சென்ற கடதாசியை, மலசலகூடத்தில் பொருத்தப்பட்டிருந்த காற்றாடியின் ஊடாக வெளியில் வீசியுள்ளதாக தெரிய வருகின்றது.
இதனை மலசலகூடத்திற்கு வெளியில் இருந்த புலனாய்வு அதிகாரிகள் அவதானித்துள்ளதுடன், குறித்த கடதாசியை எடுத்து சோதனை செய்துள்ளனர். இதையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், ரிஷாட் பதியூதீன் அனுமதிக்கப்பட்டிருந்த 52வது வாட்டின் வைத்தியரிடம் காண்பித்த போது ரிஷாட் பதியூதீன் அருந்துவதற்காக வழங்கப்பட்ட மருந்துகளையே, ரிஷாட் பதியூதீன் இவ்வாறு வெளியில் வீசியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இதையடுத்து, ரிஷாட் பதியூதீனின் சிகிச்சைகளை முடிவுக்கு கொண்டுவந்து, அவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வைத்தியர்களின் பரிந்துரைக்கு அமைய மீண்டும் அழைத்து சென்றுள்ளனர்.