எரிவாயுவின் விலை தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளரின் வழிகாட்டலுக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் யாழ்ப்பாணம், கைதடி, சாவகச்சேரி, கோப்பாய், கல்வியங்காடு, திருநெல்வேலி ஆகிய பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டு விலை தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் இதன்போது விலை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது.
மேலும் வர்த்தமானி அறிவுறுத்தலுக்கு அமைவாக வர்த்தக நிலையங்களிற்கு எரிவாயுவின் விலை தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
அத்தோடு Online மூலமான இறக்குமதியாளர் விபரம் குறிப்பிடப்படாத சருமப்பூச்சு வகைகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்த வியாபார நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.