வலியால் துடித்துடித்த சிறுனின் எக்ஸ்ரேவில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! வயிற்றில் இருந்த 5 செ.மீ. பிள்ளையார் சிலை
பெங்களூருவில் 5 செ.மீ உயரமுள்ள விநாகர் சிலையை விழுங்கிய 3வயது சிறுவன் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்த சம்பவம் இணையத்தில் பேசு பொருளாக மாறி வருகின்றது.
பெங்களூருவை சேர்ந்த 3வது வயது சிறுவன் பசவா, இவர் வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த 5 செ.மீ உயரமுள்ள ஒரு விநாயகர் சிலையை வாயில் வைத்து விழுங்கியுள்ளார்.
இதனால் அவனுக்கு எச்சில் விழுங்க முடியாமலும், நெஞ்சில் அடிப்பு ஏற்பட்டும் அவதிப்பட்டுள்ளான்.
இதை கவனித்த அவனது பெற்றோர் நிலைமையை உணர்ந்து குழந்தையை பழைய ஏர்போர்ட் ரோட்டில் உள்ள மணிப்பால் மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் நெஞ்சு மற்றும் கழுத்து பகுதியில் எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளனர். எக்ஸ்ரேவில் நெஞ்சு பகுதியில் விநாயகர் சிலை ஒன்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து டாக்டர்கள் என்டோஸ்கோப் மூலம் அந்த சிலையை அகற்ற முடிவு செய்து அடுத்த 1 மணி நேரத்தில் சிகிச்சைக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
சிறுவனுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு எஸ்டோஸ்கோபி மூலம் நெஞ்சு பகுதியிலிருந்த விநாயகர் சிலர் பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டது.
அதன்பின்பு சிகிச்சை முடிந்து 3 மணி நேரத்திற்கு பிறகு சிறுவனுக்கு உணவு கொடுக்கப்பட்டது. சிறுவன் எந்த சிரமமும் இல்லாமல் சாப்பிட்டான்.
அதன் பின்பு டாக்டர்கள் சோதனை செய்த பின்பு அவன் அன்று மாலையே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். எனினும், பெற்றோர்கள் எப்போதும் குழந்தைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்கான இந்த தகவல் குறித்து மருத்துவர்கள் பகிர்ந்துள்ளனர்.