பாஸ்போர்ட் புதுப்பித்தால் புதிய பாஸ்போர்ட் இலக்கத்தை தடுப்பூசி சான்றிதழில் திருத்த வேண்டும்.
குவைத்தில் 2 டோஸ் தடுப்பூசி முடித்த பிறகு
சான்றிதழ் பெற்றவர்கள், அதன் பிறகு உங்களுடைய பாஸ்போர்ட்டை புதுப்பித்திருந்தால் முன்னர் சான்றிதழில் குறிப்பிடப்பட்ட பழைய பாஸ்போர்ட் இலக்கம் திருத்தம் செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. Mishref கண்காட்சி மைதானத்தில் அமைந்துள்ள தடுப்பூசி மையத்தில் இயங்குகின்ற Ask-Me அலுவலகத்தில் இதற்காக வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு அல்லது ஃபைசர் தடுப்பூசியின் இரண்டு டோஸ் எடுத்தவர்களின் சான்றிதழில் பாஸ்போர்ட் இலக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சான்றிதழைப் பெற்ற பிறகு சம்பந்தப்பட்ட நபரின் பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட்டால், சான்றிதழில் புதிய பாஸ்போர்ட் எண் சேர்க்கப்பட வேண்டும். வெளிநாடுகளுக்கு பயணம் உள்ளிட்ட முக்கியமான நேரங்களில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க இது பெரும் உதவியாக இருக்கும். சான்றிதழில் உள்ள பெயர், பாஸ்போர்ட் எண் மற்றும் பிற விவரங்களைத் திருத்தவும், பொதுமக்களிடமிருந்து வரும் விசாரணைகள்(Enquire) மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் Ask-Me அலுவலகம் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.