2000 கோடி மாணிக்கம் என்பது ஒரு யானைப் பொய் .. அந்த அளவு மதிப்பு இல்லை ..
இரத்தினபுரி பெல்மடுல்ல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 510 கிலோ எடையுள்ள ஆரானுல் ரத்தினத்தின் மதிப்பு குறித்து அந்த துறையில் உள்ள நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேசிய மாணிக்கம் மற்றும் ஆபரண ஆணையம் கூறுவது போல் இந்த ரத்தினக் கல் மதிப்புமிக்கது அல்ல என மாநில மாணிக்கக் கழகத்தின் முன்னாள் உதவி மதிப்பீட்டு அதிகாரி பாலித குணசேகர தெரிவித்துள்ளார்.
பெரிய ரத்தினக் கல்லில் உள்ள கற்கள் அனைத்தும் இறந்துவிட்டன என்றும், ரத்தினக் கற்கள் ஒளி ஊடுருவி தெரியக் கூடியவையாக இல்லாமையால்,அதற்கு மதிப்பு இல்லை என்றும், ஆனால் அவற்றை 10 லட்சம் ரூபாய் அளவில் அருங்காட்சியகங்களுக்கு விற்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி ரத்தின அருங்காட்சியகத்தின் உரிமையாளர் எல்.எல்.ஏ.நந்தன இதுபோன்ற பொய்யான பரப்புரைகளால் இலங்கையின் பெயர் இழிவுபடுத்தப்படுகிறது எனவும் , தன்னிடம் இதே போன்ற மாணிக்கம் இருப்பதாகவும், அந்த மாணிக்கத்தின் மதிப்பு மூன்று அல்லது நான்கு லட்ச ரூபாய்க்கு மேல் பெறுமதி இல்லை என்றும் தெரிவித்தார்.
எனினும், மாணிக்கம் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை இந்த மாணிக்கத்தின் மதிப்பு ரூபா 2,000 கோடி (100 மில். டொலர்) பெறும் எனவும் , உரிமையாளர்களின் விருப்பப்படி வெளிநாட்டு ஏலத்தில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.