மெக்சிகோவை சேர்ந்த மனைவியை கொன்று உடலை புதரில் வைத்து எரித்த கணவன்! தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவம்

தமிழகத்தில் மெக்சிகோ பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவர் கணவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவை சேர்ந்தவர் மார்டின் மான்ட்ரிக் மன்சூர் (48). இவரது மனைவி செசில்லா அகஸ்டா (36). தம்பதிக்கு அடில்லா என்ற மகள் உள்ளார். கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

மன்சூர் 2011 ஜூலை முதல் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு நிறுவனத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டார். அங்கு குழந்தையுடன் தனியாக வசித்தார்.

செசில்லா அகஸ்டா கேரளா திருச்சூர் கலா மண்டலத்தில் மோகினி ஆட்டம் கற்றார். அங்கு தங்கி இருந்தவர், குழந்தையை பார்க்க அடிக்கடி வந்தார். 2012ல் குழந்தையுடன் வெளிநாடு செல்வதாக மன்சூரிடம் தெரிவித்தார்.

அந்த ஆண்டு ஏப்ரல் 9ல் குழந்தை பள்ளிக்கு சென்ற பின், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட மன்சூர் தாக்கியதில், செசில்லா இறந்தார்.

உடலை காரில் கொண்டுவந்து மதுரையில் உள்ள ஒரு இடத்தின் புதரில் வைத்து எரித்தார்.இந்த சம்பவம் அப்போது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்வழக்கில் மன்சூருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மகளிர் நீதிமன்றம் 2020 செப்டம்பரில் தீர்ப்பளித்தது.

பின்னர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட மன்சூர் எனக்கு எதிராக போதிய ஆவணம், சாட்சிகள் இல்லை. சம்பவம் தொடர் கோர்வையாக நடந்தது என்பதை தெளிவுபடுத்தவில்லை.

செசில்லா அகஸ்டா உடலில் காயங்கள் இல்லை என பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. இதை சரியாக பரிசீலிக்காமல் கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் மனுதாரருக்கு தற்காலிகமாக சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு, ஜாமின் அனுமதிக்கப்படுகிறது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.