வவுனியா பொருளாதார மத்திய நிலையம் திறக்க அமைச்சரவை அனுமதி
வவுனியா மாவட்ட பொருளாதார மத்திய நிலையத்தை உடனடியாக வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் முன்வைத்த கோரிக்கையை ஏற்றே அமைச்சரவை இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை கட்டுவதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் வவுனியா மதகுவைத்தகுளத்தில் 291 மில்லியன் நிதியை ஒதுக்கீடுசெய்து அன்றைய அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டது..
ஆனாலும் அதன் அமைவிடம் தொடர்பில் அன்றைய வவுனியா மாவட்ட அரசியல் தரப்பினரிடையே காணப்பட்ட இழுபறி நிலை காரணமாக இக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டபோதும் மக்களது வர்த்தக நடவடிக்கைகளுக்கு விடாது பற்றைகள் சூழ்ந்து காணப்பட்டது.
இந்நிலையில் பொருளாதார மத்திய நிலையத்தை திறப்பதற்கான அனுமதியை வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு இம் மாவட்ட வர்த்தகர்களும் பொதுநலவிரும்பிகளும் கொண்டுசென்றனர். இந் நிலையில் நேற்று அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த விடயத்தை கோரிக்கையாக முன்வைத் திருந்தார்.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை வவுனியா மாவட்ட பொருளாதார மத்திய நிலையத்தை உடனடியாக திறப்பதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.