வாகன விபத்துக்களால் 9 பேர் உயிரிழப்பு.

நேற்றைய தினம் வாகன விபத்துக்களினால் 9 பேர் மரணித்துள்ளனர்.
அதனைக் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 24 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வாகன விபத்துக்களால் 385 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் அதிகளவான விபத்துக்கள் உந்துருளிகள் மற்றும் முச்சக்கரவண்டிகளினால் இடம்பெறுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும் , சாரதிகள் வீதியில் பயணிக்கும் போது, மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.