கொவிட் -19 நோய்க்கான சுய பரிசோதனை அலைபேசிச் செயலி அறிமுகப்படுகிறது
கொவிட்−19 தொடர்பிலான தமது உடல் நிலைமை குறித்து, தாமாகவே ஆராய்ந்து பார்த்துக்கொள்ளும் வகையிலான கையடக்கத் தொலைபேசி செயலி (APP) ஒன்றை சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தவுள்ளது.
நுரையீரலின் செயற்பாடுகளை அவதானித்தல், கிடைக்கும் பெறுபேறுகளுக்கு அமைய ஆலோசனைகளை வழங்குதல், தரவுகளை தன்னிச்சையாக சுகாதார அமைச்சின் வைத்திய குழுவுடன் பகிர்ந்துக்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகள் இந்த செயலி ஊடாக முன்னெடுக்க முடியும்.
கொவிட்−19 Self Shield என அழைக்கப்படும் இந்த செயலியின் ஊடாக, கொவிட் வைரஸ் தொடர்பான சுகாதார நிலைமைகள் குறித்து புரிந்துணர்வுகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
இந்த செயலியின் ஊடாக இயலுமான விரைவில் வைத்திய ஆலோசனைகளை பெற்று, சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
ஒரு சில நிமிடங்களிலேயே தமது உடல் நிலையை, தாமே பரிசோதித்துக்கொள்ள முடியும் என கூறப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை https://sshield.org/என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும்.