புலிநீக்க அரசியல் ஈடுபடுபவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் – கே.வி.தவராசா
வீட்டுக்கு வாக்களிக்கின்ற அனைவரும் தமது முதல் வாக்கினை எமது கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்க வேண்டும். மற்றைய இரு வாக்குகளை புலிநீக்க அரசியல் தமிழ் தேசிய நீக்க அரசியல் ஈடுபடுபவர்கள் கட்சிக்குள்ளே இருந்தாலும் அவர்களுக்கு வழங்காது எமது தேசிய பிரச்சினைகளை பலமாக கொண்டு செல்லக்கூடியவர்களுக்கு வாக்களிக்கவும் என ஐனாதிபதி சட்டத்தரனி கே.வி. தவராசா தெரிவித்தார்.
தமிழ்த் தேசியத்தில் தீவகத்தின் வகிபாகம் எனும் தலைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்துரை கூட்டம் நேற்று கந்தர்மடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வன்முறையாளர்களை தாம் ஏற்றுக்கொள்ளப்போதில்லை சிலர் இப்போது கூறிகின்றனர். இவர்கள் ஆயுதப் போராட்டம் எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பதனை இவர்கள் நேரடியாக அறியாதவர்கள். ஆனால் நான் அவ்வாறில்லை.
நாங்கள் சிறுபான்மையின மக்கள் இல்லை. எங்களுக்கென பூர்வீக நிலம் உள்ளது. எங்களுக்கென்ற தனித்துவமான மொழி உள்ளது. எனவே தமிழர்களாகிய நாங்கள் ஒரு தேசிய இனம். அந்த இனத்திற்கான அரசியல் சமத்துவம், அரசியல் அபிலாசைகள நிறைவேற்ற முடியாமல் போன சூழ்நிலையில் தான் நாங்கள் போராட்டத்தை ஆரம்பித்தோம்.
உன்மையில் ஆயுத ரீதியான யுத்தம் முடிவிற்கு வந்துவிட்டது. இப்போது எமது ஆயுதமாக வாக்குச்சீட்டு காணப்படுகிறது. எங்கள் கையில் உள்ள வாக்குச் சீட்டை பாவிக்காது நாம் விடுவோமாக இருந்தால் வரலாற்றில் நாம் தவறிழைத்து விட்டவர்களாக ஆகிவிடுவோம் என்றார்
Comments are closed.