கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!
கொழும்பில் வசிப்போருக்கு டிஜிட்டல் தடுப்பூசி அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது.
கொழும்பு 1 முதல் 15 வரையிலானவர்களுக்கு இவ்வாறு டிஜிட்டல் தடுப்பூசி அட்டைகள் வழங்கப்படும் என மாநகரசபையின் தொற்று நோய் நிபுணர் டொக்டர் தினு குருகே தெரிவித்துள்ளார்.
கொவிட் டிஜிட்டல் தடுப்பூசி அட்டையை பெற்றுக் கொள்ள விரும்புவோர் தடுப்பூசி இரண்டு பக்கங்களையும், தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் இரண்டு பக்கங்களையும் , தொடர்பு இலக்கத்தையும் epidunitcmc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிற்கு அனுப்பி வைக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி சான்றிதழ் ஆயத்தப்படுத்தப்பட்டதன் பின்னர் அது அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முறையாக தடுப்பூசி ஏற்றப்பட்ட கொழும்பு வாழ் மக்களுக்கு இவ்வாறு டிஜிட்டல் தடுப்பூசி அட்டை வழங்கப்பட உள்ளது.