ஐ.நா. கூட்டத் தொடருக்கு முன்னர் பிரிட்டன் தூதுவரின் காலில் விழுகின்றது ராஜபக்ச அரசு!
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதியரசர் நவாஸ் தலைமையில் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையின் காரணிகளை ஜெனிவாக் கூட்டத் தொடருக்கு முன்னர் பிரிட்டன் தூதுவருக்குத் தெளிவுபடுத்த அரசு தயாராகியுள்ளது என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவர்களின் சொந்தக் காணிகளை மீள வழங்குவது உள்ளிட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் முடிந்தளவு முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும், இவை தொடர்பில் சர்வதேச சமூகத்தைத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவர்களின் சொந்தக் காணிகளை மீள வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் முடிந்தளவு முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன எனவும், இவை தொடர்பில் சர்வதேச சமூகத்தைத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கும் அபிவிருத்திச் செயற்பாடுகள், காணி விடுவிப்புகள் மற்றும் இது தொடர்பில் கடந்த ஜெனிவா மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கையின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மேற்படி கூட்டத்தில் தெரிவித்தார்.
“உயர்நீதிமன்ற நீதியரசர் நவாஸ் தலைமையில் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு அதன் ஊடாக சாட்சிகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதன் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதில் அவசியமான காரணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதே காரணிகளை ஜெனிவாக் கூட்டத் தொடருக்கு முன்னர் இலங்கையிலுள்ள பிரிட்டன் தூதுவருக்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மேலும் கூறினார்.