உடனடி ஊரடங்கு ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் சமூக மருத்துவப் பேராசிரியர் எடுத்துரைப்பு.
நாட்டில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டால் 20 நாட்களுக்குள் குறைந்தது 1,200 இறப்புகளைத் தடுக்க முடியும் என்று சமூக மருத்துவப் பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முடிவெடுப்பதில் 5 நாட்கள் தாமதமானலும் அது 700 பேரின் விருப்பமில்லாத மனிதக்கொலை என்று குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் அகம்பொடி கொரோனா அதிகரிப்பு வரைபடங்களை பதிவிட்டு இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.