அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் களமிறங்கும் டுகாட்டி எக்ஸ்டயவெல்- விலை என்ன?
இந்தியாவில் ரூ.18 லட்சம் என்கிற விலையில் டுகாட்டி நிறுவனம் எக்ஸ்டயவெல் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய டுகாட்டி பைக்கை பற்றி விரிவாக பார்ப்போம்.
இந்த புதிய டுகாட்டி மோட்டார்சைக்கிள் முதன்முறையாக கடந்த ஆண்டு இறுதியில், நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. யுரோ-5/ பிஎஸ்6 -க்கு இணக்கமானதாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய எக்ஸ்டயவெல், விற்பனையில் இருக்கும் 2021 டயவெல்லின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், டார்க் & ப்ளாக் ஸ்டார் என்கிற இரு விதமான வேரியண்ட்களில் புதிய எக்ஸ்டயவெல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் டார்க் வேரியண்ட்டின் விலை தான் ரூ.18 லட்சம் ஆகும். கருப்பு வேரியண்ட்டின் விலை ரூ.22.60 லட்சம். இந்த இரு வேரியண்ட்களும் பெயருக்கு ஏற்றாற்போல் கருப்பு நிறத்தில் தான் வடிவமைக்கப்படுகின்றன.
ஆனால்., ஒன்று பளபளப்பானதாகவும், மற்றொன்று மேட் ஷேடிலும் உள்ளன. ப்ளாக் ஸ்டார் வேரியண்ட் மட்டும் கூடுதலாக பெட்ரோல் டேங்கில் சிவப்பு நிறத்தில் வளையத்தை கொண்டுள்ளது. இந்த வேரியண்ட் மட்டும் மெஷின் அலாய் சக்கரங்களையும், மெல்லிய தோலில் இருக்கையையும், ப்ரெம்போ எம்50 காலிபர்களையும் பெற்றுள்ளது.
டுகாட்டி டயவெல் மோட்டார்சைக்கிளில் யுரோ 5/ பிஎஸ்6 இணக்கமான டெஸ்டாஸ்டிரெட்டா டிவிடி 1,262சிசி எல்-இரட்டை என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 9,500 ஆர்பிஎம்-இல் 158 பிஎச்பி மற்றும் 5,000 ஆர்பிஎம்-இல் 130 என்எம் டார்க் திறனை இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
இது 8 பிஎச்பி மற்றும் 2 என்எம் டார்க் திறன் அதிகமாகும். ஆனால் டிரான்ஸ்மிஷன் தேர்வில் மாற்றம் இல்லை, வழக்கமான 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் தான் தொடரப்பட்டுள்ளது. ஆனால் எக்ஸாஸ்ட் குழாயின் வடிவம் புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹேண்டில்பார் ஒற்றை துண்டாக வழங்கப்பட்டுள்ளது.
ஸ்விங்கார்ம் ஒற்றை பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் பிராண்டின் டுகாட்டி மல்டிமீடியா சிஸ்டமும் புதிய எக்ஸ்டயவெலில் வழங்கப்பட்டுள்ளது. ரைடிங் மோட்களாக ஸ்போர்ட், டூரிங், அர்பன் என்பவை உள்ளன. இந்த டுகாட்டி பைக்கின் முன் சக்கரத்தில் 120/70 இசட்ஆர்17 என்ற அளவிலும், பின் சக்கரத்தில் 240/45 இசட்ஆர்17 என்ற அளவிலும் பைரெல்லி டயப்லோ ரோஸ்ஸோ-3 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஆனால் 17 இன்ச் அலாய் சக்கரங்களின் டிசைன் வேரியண்ட்களை பொறுத்து வேறுபடுகின்றன. எக்ஸ்டயவெல்லின் இரு வேரியண்ட்களின் எடை ஒரே மாதிரியாக 247 கிலோவாக உள்ளது.
இதையடுத்து, சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 50மிமீ யுஎஸ்டி ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. ப்ரேக்கிங் பணியை கவனிக்க ப்ரெம்போ எம்50 4-பிஸ்டன் காலிபர்களுடன் 320மிமீ இரட்டை டிஸ்க்குகளும், பின்பக்கத்தில் ப்ரெம்போ 2-பிஸ்டன் சுழலும் காலிபர் உடன் 265மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளன.