குருபரன் விடையத்தில் பல்கலைக்கழக சமூகத்தின் மௌனம் கவலையளிக்கிறது – கஜேந்திரகுமார்
பல்கலைக்கழக சமூகம் குருபரனுடைய விடையத்தில் பக்கபலமாக செயற்படவில்லை என்பது எமக்கு கவலையளிக்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
இன்றைய தினம் கல்வி ரீதியாகவும் சமூகரீதியாகவும் நாம் பின்னடைவைச் சந்தித்து இருக்கின்றோம். அதற்கு காரணம் கலாநிதி குமரவடிவேல் குருபரன் யாழ் பல்கலைக்கழகத்தில் சட்ட விரிவுரையாளராகவும் சட்டத்தரனியாகவும் பணியாற்ற முடியாது என திட்டமிடப்பட்ட வகையிலே தடுக்கப்படமை ஆகும்.
குருபரன் சிரேஸ்ட விரிவுரையாளராக பல வருடங்களாக கடமையாற்றி வருகின்றார். அவர் தனக்கான தனித்துவமான இடத்தினை சட்டத்துறையில் வைத்திருக்கின்றார். பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக செயற்பட்டுக்கொண்டிருந்த அதே சமயம் சமுகத்திற்கு முக்கியமான விடையங்களில் சட்ட ஆலோசகராகவும் தனது பணியினை தொடர்ந்து முன்னெடுத்து இருக்கிறார். என்றார்
Comments are closed.