சுதந்திரத்தை கொண்டாடும் வகையில் அண்ணாமலை தலைமையில் சைக்கிள் பேரணி

75வது சுதந்திர தினத்தை போற்றும் வகையில் பாஜக சார்பில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற 75 பேர் கலந்து கொண்ட சைக்கிள் பேரணியை மாநில தலைவர் அண்ணாமலை துவக்கிவைத்தார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி சுங்கச்சாவடியில் பாஜக சார்பில் 75 பேர் கலந்துகொள்ளும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பாஜக இளைஞர் அணி சார்பில் மாபெரும் சைக்கிள் பேரணியை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்து அண்ணாமலை சைக்கிள் பேரணியில் சென்றார்.

தேசிய கொடியை ஏந்தியவாறு உத்தண்டி சுங்கச்சாவடியில் துவங்கிய சைக்கிள் பேரணி மாமல்லபுரம் வரை சென்று நிறைவடைந்தது. முன்னதாக சுதந்திர தினத்தையொட்டி மரக்கன்றுகளை நட்டுவைத்தனர். உடன் மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம், செங்கல்பட்டு மாவட்ட பார்வையாளர் வேதாசுப்பிரமணியம் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.