ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசமானது.
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி பொறுப்பில் இருந்து பதவி விலகிய அஷ்ரப் கனி அண்டை நாடான தஜிகிஸ்தானுக்குச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2 வாரங்களில் 26 மாகாணங்களின் தலைநகரங்களைக் கைப்பற்றிய தலிபான்கள் எவ்வித எதிர்ப்பும் இன்றி தலைநகர் காபூலை கைப்பற்றினர்.
இதையடுத்து ஜனாதிபதி மாளிகை சென்ற தலிபான் பிரதிநிதிகள் வன்முறையின்றி ஆட்சி மாற்றத்தை சாத்தியப்படுத்த பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக உள்துறை அமைச்சின் மூத்த அதிகாரி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானை Islamic Emirate of Afghanistan எனப் பிரகடனப்படுத்தினர் தலிபான்கள்…
இனி அந்நாடு ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் என்றழைக்கப்படும்…!