மாகாணங்களைக் கடந்து பயணிக்க முயற்சித்த 361 பேர் திருப்பியனுப்பல்.
மாகாணங்களைக் கடந்து நேற்றுப் பயணிக்க முற்பட்ட 361 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த 361 பேர் சட்டவிதிமுறைகளை மீறிப் பயணிப்பதற்கு முயற்சித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயணக்கட்டுப்பாடுகளை மீறிப் பயணிப்போரைக் கைதுசெய்யும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.