பவித்ராவையும் தூக்கி , 7 கெபினட் அமைச்சர்களை மறுசீரமைத்த ஜனாதிபதி கோட்டாபய
7 கெபினட் அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்றுமுன் புதிய அமைச்சுகளில் பதவியேற்றனர்.
அதன்படி,
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சராக பணியாற்றிய டல்லஸ் அழகப்பெரும, வெகுஜன ஊடக அமைச்சராகவும் ,
போக்குவரத்து அமைச்சராக பணியாற்றிய காமினி லோகுகே , புதிய மின்சக்தி மற்றும் ஆற்றல் அமைச்சராகவும் ,
சுகாதார அமைச்சராக பணியாற்றிய பவித்ரா வன்னியாராச்சி , போக்குவரத்து அமைச்சராகவும் ,
வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சராக இருந்த கெஹெலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சராகவும் ,
கல்வி அமைச்சராக இருந்த ஜிஎல் பீரிஸ் , வெளிவிவகார அமைச்சராகவும் ,
வெளிவிவகார அமைச்சராக பணியாற்றிய தினேஷ் குணவர்த்தன, கல்வி அமைச்சராகவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்கள்.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது தற்போதைய இலாகாக்களுக்கு மேலதிகமாக , அபிவிருத்தி மேற்பார்வை அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பவித்ரா வனியயாரச்சியின் பதவியில் மாற்றம் ஏற்படாது என யூகங்கள் வந்து கொண்டிருந்த நிலையில் அவருடைய சுகாதார அமைச்சு பறிக்கப்பட்டு , அவருக்கு போக்குவரத்து அமைச்சு கொடுக்கப்பட்டுள்ளது.