அரசாங்கத்திற்கு விடுக்கப்படும் எச்சரிக்கை.
நாட்டை முழுவதுமாக முடக்குவதற்கு அரசாங்கம் முடிவெடுக்கா விட்டால், அனைத்து தொழில்களிலும் உள்ள தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாட்டைப் பூட்டிக் கொள்ளும் என சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
வரும் வெள்ளிக்கிழமையன்று அரசாங்கம் நாட்டை முழுவதுமாக முடக்கும் ஊரடங்கு விதிக்கப்படவில்லை என்றால், அனைத்து தொழிற்சங்கங்களும் திங்கட்கிழமை முதல் கூட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் எனவும் எச்சரித்துள்ளார்.
இது தொழில்முறை கோரிக்கைகளுக்காக எடுக்கப்பட்ட தீர்மானம் இல்லை. மாறாக நாட்டு மக்களை வீட்டிலேயே வைத்திருக்க எடுத்த நடவடிக்கை.
இந்த நேரத்தில் மருத்துவம் மற்றும் அறிவியலின் குரலுக்கு செவிசாய்ப்பது மட்டுமே செய்ய வேண்டும்.
இல்லையெனில் இந்த நாடு மிகவும் மோசமான சூழ்நிலைக்கு செல்லும் என்றார்.
அந்த வகையில், மருத்துவம் மற்றும் அறிவியலின் குரலைக் கேட்டு, இந்த நாடு முழுவதுமாக மூடப்பட வேண்டும். அதற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அறிவியல் ரீதியாக 10 நாள் பூட்டுதல் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டுகிறார்