மது போத்தல்களை வாகனத்தில் ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது.
நேற்று நெல்லியடி பகுதியில் அளவுக்கதிகமான கால் போத்தல்கள் சாரயத்தை வாகனத்தில் ஏற்றிச் சென்றவேளை நெல்லியடி பொலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டில் நேற்று முதல் எதிர்வரும் 30ம் திகதி முடக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் மதுப் பிரியர்களுக்கு அதிக விலையில் விற்பனை செய்வதற்காக பலர் மதுப் போத்தல்களை பதுக்கல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த முடக்கம் ஏற்பட்ட போது கால் போத்தல் ஒன்றின் சாதாரண விலையை விட மூன்று மடங்கு அதிகமாக கறுப்புச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.