புகைப்பிடிப்போருக்கு கொரோனா அதிகமாக தொற்றுவதற்கான வாய்ப்பு.
புகைப்பிடிப்போருக்கு கொரோனா வைரஸ் தொற்றுவதற்கான வாய்ப்பு 14 மடங்கு அதிகம் காணப்படுகிறது என்று புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகாரசபை தெரிவித்துள்ளது.
புகைப்பிடிக்கும் இடத்தில் ஒரு நபர் இருந்தாலும் மேற்குறிப்பிட்ட ஆபத்தே ஏற்படும் என்று அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அனைத்து தனிநபர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் புகைபிடிப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ள அதிகாரசபை, வைரஸால் ஏற்படும் சிக்கல்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் அவை மரணத்துக்குக் கூட வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தடுப்பூசி போடப்பட்ட நபர்கள், மது அருந்துவதாலும் புகைபிடிப்பதாலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதும் பாதிக்கப்படுகிறது என்று அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.