அனைத்து விதமான சுவாசப் பிரச்சனைகளையும் நீக்கும் தன்மை வேப்ப எண்ணெய்க்கு உண்டு.
வேப்ப எண்ணெய்யில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு பாதுகாப்பு பண்புகள், புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளின் உயிரணு சுழற்சியை இடைமறித்து செயல்படுகிறது. இதனால் அவற்றின் வளர்ச்சி மற்றும் பரவல் தடுக்கப்படுகிறது.
அனைத்து விதமான சுவாசப் பிரச்சனைகளையும் நீக்கும் தன்மை வேப்ப எண்ணெய்க்கு உண்டு. கெட்ட சுவாசம், ஆஸ்துமா போற்றவற்றை குணப்படுத்த வேப்ப எண்ணெய் பயன்படுகிறது. ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்திலும் வேப்ப எண்ணெய் நெடுங்காலமாக பயன்படுத்தப்படுகிறது.
முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் முகத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கின்றன. தூசு, அழுக்கு போன்றவை நம் முகத்தில் படும்போது முகத்தில் உள்ள நுண்துளைகள் அடைபட்டு கிருமி தொற்றின் காரணமாக முகப்பருக்கள் ஏற்படுகின்றன.
இதை சரிசெய்ய வேப்ப எண்ணெய்யை எடுத்து அதை சிறிது நீரில் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் எண்ணெய் பசைக் கட்டுப்படும். மேலும் முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளும் அகலும்.
பல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேப்ப எண்ணெய் முக்கிய பங்காற்றுகிறது. வேப்ப மரக் குச்சிகளைக் கொண்டு பல் துலக்கினால் அது பற்களைத் வலுவாக்கி தூய்மைப்படுத்தும். சொத்தை பல்லால் அவதிப்படுபவர்கள் வேப்ப எண்ணெய்யை பஞ்சில் நனைத்து பல்லில் வைத்தால் பல் வலிக்கு உடனே நிவாரணம் கிடைக்கும். ஈறுகளைப் பாதுகாக்கவும், வாயில் உண்டாகும் கிருமிகளை ஒழிக்கவும் வேப்ப எண்ணெய் பெரிதும் பயன்படுகிறது.
நம் உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய உறுப்பு கல்லீரல் ஆகும். வேம்பம் பூ மற்றும் வேப்ப எண்ணெய்யை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு 5 கிராம் உலர்ந்த வேப்பம் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு, அதனுடன் சில துளிகள் வேப்ப எண்ணெய் சேர்த்து மூடி வைத்திருந்து வடிகட்டிச் குடித்து வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி போன்றவை நீங்கி கல்லீரல் நன்கு இயங்கும்.