மகாராஷ்டிரத்தில் லேசான நிலநடுக்கம்
மகாராஷ்டிரத்தின் ஹிங்கோலி பகுதியில் நேற்று ஆக-22 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கமானது ஹிங்கோலியில் இருந்து 77 கி.மீ தூரத்தில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.