வீட்டில் தற்கொலை செய்த நபருக்குக் கொரோனாத் தொற்று!
வீட்டில் தற்கொலை செய்துகொண்ட நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பதுளை – மஹிலகஸ்தென்ன பகுதியைச் சேர்ந்த 37 வயதான நபரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் தனியாக வசித்து வந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.