பிரேத அறையில் நிலவும் இடப்பற்றாக்குறை.
கண்டி தேசிய வைத்தியசாலை யில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை மிக துரிதமாக அதிகரித்து வருவதன் காரணமாகவும் பிரேத அறையில் நிலவும் இட பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதன் நோக்கில் கண்டி தேசிய வைத்தியசாலை அபிவிருத்திக் குழு தலைவர் மொஹான் சமரகோன் அவர்கள் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவை தேசிய தலைவர் அல்ஹாஜ் ரிஸ்மி ஷஹீத் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஒரு தொகை மரணப் பெட்டிகள் வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
தலைவர் சஹீட் எம். ரிஷ்மியினால் கண்டி தேசிய வைத்தியசாலை அபிவிருத்தி குழு அங்கத்தவரும் கண்டி ஜனாசா சங்க உறுப்பினருமான ஜனாப் எஸ் எம் ரிஸ்வி அவர்களிடம் கையளிக்கப்பட்து. இந்த நிகழ்விற்கு கண்டி மாவட்ட வை.எம்.எம். ஏ.பணிப்பாளர் பவ்ஸ் ஏ காதர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதை இங்கு படங்களில் காணலாம்.
(இக்பால் அலி)